கரூர்: மின்கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து - இளம் பெண் மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் அருகே வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், சிக்கிய இளம் பெண்ணை பத்திரமாக தீயணைப்புத்துறையினர் மீட்டனர். சாமிநாதபுரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான மூன்று மாடி கொண்ட வீடு ஒன்று உள்ளது. இங்குள்ள இரண்டாவது தளத்தில் ராஜேந்திரனின் மூத்த மகள் இருந்த நிலையில் வீட்டில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை போராடி அணைத்தனர். மேலும் வீட்டில் இருந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். 

varient
Night
Day