கல்லூரி அமைக்க கோயில் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிரான வழக்கு - தலைமைச் செயலாளர், வேளாண் பல்கலை., பதிவாளர் பதிலளிக்க உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் மாவட்டத்தில் வேளாண் கல்லூரி அமைக்க கோயிலுக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்த பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக தலைமைச் செயலாளர், கோவை வேளாண் பல்கலைக் கழக பதிவாளர் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இரண்டு வாரங்களில் மனு தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. 


குளித்தலை இனுங்கூரில் வேளாண் கல்லூரி அமைப்பதற்காக மத்தியபுரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கோயிலுக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்தும் இந்த அரசாணையை ரத்து செய்துவிட்டு பாசன வசதி, கிணறு, களம், குடோன் என அனைத்து வசதிகளும் உள்ள இனுங்கூரில் வேறொரு இடத்தை தேர்வு செய்யக்கோரிய இவ்வழக்கில் இந்த உத்தரவை உயர்நீதிமன்ற அமர்வு பிறப்பித்துள்ளது.

Night
Day