கல்வராயன் மக்களை முதலமைச்சர் நேரில் சந்திக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலைப்பகுதியை முதலமைச்சர் அல்லது அமைச்சர் உதயநிதிநேரில் பார்வையிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த நிலையில், கல்வராயன் மலை பகுதி மக்களின் நிலை குறித்து உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கல்வராயன் மலைப்பகுதிக்கு முதல்வர் நேரில் சென்று மக்களின் நிலை குறித்து கேட்டறிய வேண்டும் என்றும், முதல்வரால் செல்ல முடியவில்லை எனில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினாவது நேரில் செல்ல வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தொடர்ந்து கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு சாலை, ரேஷன் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்த உயர்நீதிமன்றம், அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்தது. 

Night
Day