களப்பாகுளத்தில் புரட்சித்தாய் சின்னம்மா உரை - அம்மாவின் வழியில் மக்கள் பயணம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களப்பான் குளம் பகுதிக்கு புரட்சித்தாய் சின்னம்மா சென்றபோது கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். மேள தாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து கழகக் கொடியுடன் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் புரட்சித்தாய் சின்னமாவை வரவேற்றனர். கிளைக் கழகச் செயலாளர் து.வள்ளிநாயகம், கழக நிர்வாகி எம்.சுந்தரையா, P.S.R.மகாராஜன், திருமதி அழகு தமிழ்செல்வி, திருமதி மகாலட்சுமி ஆகியோர் தலைமையில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதனைதொடர்ந்து அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடையே உரையாற்றிய புரட்சித்தாய் சின்னம்மா, தென்காசி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருவதாகவும், எங்கு பார்த்தாலும் கழிவுநீர் ஓடி, சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். திமுக அரசு வெற்று அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டு தமிழக மக்களை ஏமாற்றி வருவதாக சின்னம்மா குற்றம்சாட்டினார். 

சிறுவர்கள் சிலம்பாட்டம் ஆடி, சின்னம்மாவுக்கு வரவேற்பு அளித்தனர். பெண்கள், புரட்சித்தாய் சின்னம்மா மீது மலர்தூவி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

சிலம்பாட்டம் ஆடிய சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா சாக்லேட்டுகள் வழங்கி மகிழ்ந்தார்.

இதனைதொடர்ந்து, கழக தொண்டர்களின் எழுச்சி முழக்கத்திற்கிடையே புரட்சித்தாய் சின்னம்மா, கழக கொடியை ஏற்றி வைத்தார். 

கழக நிர்வாகிகள், புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு வீரவாள் வழங்கினார்கள்.  



Night
Day