கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் - சிபிசிஐடி விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களிடம் சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயம் குடித்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில்,  இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி கூடுதல் டி.எஸ்.பி. கோமதி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த சூழலில், கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் சிபிசிஐடி கூடுதல் டிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் இன்று விசாரணையை தொடங்கினர். பாதிக்கப்பட்டவர்கள் எங்கு சென்று கள்ளச் சாராயம் வாங்கினார்கள் என்பது குறித்தும், இதில் தொடர்புடையவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தனித்தனியே, சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day