கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் மண்ணெண்ணெய் கேனுடன் பொதுமக்கள் சாலை மறியல்

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே கையில் மண்ணெண்ணெய் கேனுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசால் ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட்டதாகவும் வீடு கட்டக்கூடாது எனக்கூறி தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், உளுந்தூர்பேட்டை - கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் மண்ணெண்ணெய் கேனுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Night
Day