கள்ளக்குறிச்சி மரணம்; நீதிபதி வேதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 41பேர் உயிரிழந்த நிலையில் 100க்கும் மேற்பட்டவர்கள் புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக கோவிந்தராஜன் என்கிற கண்ணுகுட்டி,  தாமோதரன், கோவிந்தராஜனின் மனைவி விஜயா ஆகிய மூவர் மீது  நான்கு பிரிவுகளின் கீழ்  போலீசார் கைது செய்யப்பட்டு விசாரித்து வரும் நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். இதனை தொடார்ந்து திண்டுக்கல் நகர் பகுதியில் 24மணி நேரமும் சட்டவிரோத மது விற்பனை வீடியோவை பார்த்த நீதிபதி அதிர்ச்சியடைந்து வேதனையை தெரிவித்துள்ளார் 


கள்ளக்குறிச்சி சம்பவம் மிகுந்த வேதனையை அளிக்கிறது; சட்ட விரோத மது விற்பனையை பொதுமக்களே வீடியோ எடுத்த பின்பும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை? கள்ளக்குறிச்சி சம்பவம் போன்று மேலும் ஒரு சம்பவம் நடைபெறக்கூடாது; சட்டவிரோத மது விற்பனை செய்பவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது  என்ற கேள்விகளை அடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தகுந்த நடவடிக்கையை எடுக்க மாவட்ட எஸ்.பி க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி  உத்தரவு  




Night
Day