கள்ளக்குறிச்சி - காலி நாற்காலிகளிடம் வாக்கு சேகரித்த அமைச்சர் எ.வ வேலு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற திமுக செயல்வீரர் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசிக்கொண்டிருந்தபோது பொதுமக்கள் வெளியேறியது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. 

நாடு மாதம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக கட்சியில் ஏற்பட்டுள்ள உட்பூசல் காரணமாக ஆதரவாளர்கள் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் நிகழ்ச்சியில் அமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோது நிகழ்ச்சிக்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவரும் வெளியேறியதால் காலி நாற்காலிகள் மட்டுமே மிஞ்சியது. இதனை பார்த்த அங்கிருந்த சிலர், யாருமே இல்லாத கடையில் அமைச்சர் யாருக்கு டீ ஆற்ற முயற்சிக்கிறார் என விமர்சித்தனர்.

varient
Night
Day