கள்ளக்குறிச்சி: ஏரி வற்றியதால் தண்ணீர் பற்றாக்குறை - பதரான நெற்கதிர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சதைபிடிக்கும் நேரத்தில் ஏரியில் தண்ணீர் வற்றியதால், நெற்கதிர்கள் பதறாக மாறியது விவசாயிகளை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. வானம்பட்டு மட்டிகையில் சுமார் 400க்கும் மேற்பட்ட ஏக்கரில், நெல் சாகுபடி செய்யப்பட்டது. கதிர் வந்த நிலையில், மணி பிடிக்கும் நேரத்தில் ஏரியில் தண்ணீர் வற்றியுள்ளது. இதனால், நெல் வயல்கள் காய்ந்து சருகாகின. மணி பிடிக்காத நெற்கதிர்கள், பதறாக மாறியுள்ளன. ஒரு மூட்டை நெல் கூட அறுவடை செய்ய முடியாது என கதறும் விவசாயிகள், கடன் வாங்கி சாகுபடி செய்துள்ளதால், அரசு உதவி செய்ய வேண்டும் என கோரியுள்ளனர். 

Night
Day