கள்ளச்சந்தையில் மது விற்பனை - பொதுமக்கள் வேதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் ராயர்பாளையத்தில் டாஸ்மாக்‍ கடை அருகே அதிகாலையிலேயே கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

ராயர் பாளையத்தில் விளை நிலத்திற்கு அருகில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிகாலை முதலே கள்ளச்சந்தையில் டாஸ்மாக் கடை வெளியில் படுஜோராக விற்பனை நடைபெற்று வருகிறது. நண்பகல் 12 மணிக்கு டாஸ்மார்க் கடை திறக்க அரசு அறிவுறுத்திய நிலையில் விவசாய நிலத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Night
Day