எழுத்தின் அளவு: அ+ அ- அ
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம் என அழைப்பு விடுத்து கழக நிர்வாகிகள் விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
அஇஅதிமுக பிளவுபட்டு உள்ளதால், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும் பின்னடைவை சந்திக்க நேரிட்டது. இதனால், அதிர்ச்சிக்குள்ளான தொண்டர்கள், கழகத்தை தொடர் தோல்வியில் இருந்து காப்பாற்றவும், கழகத்தை சிறப்பாக வழிநடத்தவும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா முன்வரவேண்டுமென அழைப்பு விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் சுற்று வட்டார பகுதிகளான திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, வானூர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகளில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம் என அழைப்பு விடுத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வென்று காட்டுவோம் என்றும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம் என்றும் குறிப்பிட்டு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் வானூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். புரட்சித்தாய் சின்னம்மா தலைமை ஏற்க வேண்டி அஇஅதிமுக தொண்டர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் காண்போரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.