கழகத் தொண்டரின் தந்தை மறைவு - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தொகுதி கழகத் தொண்டர் வணதங்கராஜாவின் தந்தை மறைவுக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தொகுதி, மழவராயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கழகத்தொண்டர் எஸ்.எஸ்.வணதங்கராஜாவின் தந்தையான எஸ்.சங்கரபாண்டி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.

அன்பு சகோதரர் சங்கரபாண்டியை இழந்து வாடும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

Night
Day