'மக்களால் நான், மக்களுக்காகவே நான்' என்ற புரட்சித்தலைவி அம்மாவின் தாரக மந்திரத்தை, வழிகாட்டுதலாகக் கொண்டு தமிழகத்தில் மாண்புமிகு அம்மாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் மலரச் செய்ய சபதமேற்று அதனை நிறைவேற்ற அரும்பணி ஆற்றிவருகிறார் புரட்சித்தாய் சின்னம்மா. அஇஅதிமுகவில் ஒற்றுமையை ஏற்படுத்தி அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு செயல்படும் புரட்சித்தாய் சின்னம்மாவின் லட்சிய வேள்வி மகத்தான வெற்றியைப் பெறும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி தமிழக மக்களையும், உலகெங்கிலும் பரவி வாழும் கோடிக்கணக்கான தமிழர்களையும் ஆறாத் துயரில் ஆழ்த்திவிட்டு, புரட்சித்தலைவி அம்மா, பூவுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு விண்ணுலகம் சென்ற நாள்...
மாண்புமிகு அம்மாவின் மறைவுக்குப் பின்னர், அஇஅதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கட்டிக்காத்து வரும் புரட்சித்தாய் சின்னம்மா, கழகத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும் தனது முயற்சி குறித்து, தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் எடுத்துரைத்து வருகிறார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் அவ்விரு தலைவர்களின் பொற்கால ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதே புரட்சித்தாய் சின்னம்மாவின் பிரதான லட்சியமாக உள்ளது.
மாண்புமிகு அம்மாவின் அரசியல் பணிகளில், தான் உடன் இருந்தது பற்றியும், அப்போதைய நிகழ்வுகள் குறித்தும் புரட்சித்தாய் சின்னம்மா கழகத் தொண்டர்களிடம் உருக்கமாக எடுத்துரைத்து வருகிறார்.
தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றிடவும், மாண்புமிகு அம்மாவின் பொற்கால ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் மலரச் செய்யவும், பல்வேறு பகுதிகளில் அம்மாவின் வழியில் பயணம் மேற்கொண்டுவரும் புரட்சித்தாய் சின்னம்மா, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா, தனக்கு வந்த சோதனைகளையெல்லாம். தர்மத்தின் துணைகொண்டு எப்படி முறியடித்தார்? என்பதை விளக்கிக்கூற தவறுவதில்லை.
கழகத்தின் சாதாரண தொண்டர்கள் முக்கிய பொறுப்புகளுக்கு வர, யாரும் முட்டுக்கட்டை போடக்கூடாது என்பது புரட்சித்தாய் சின்னம்மாவின் உயரிய கொள்கையாகும்.
அஇஅதிமுகவில் ஒற்றுமையை ஏற்படுத்தி, மீண்டும் அதனை வலிமைமிக்க பேரியக்கமாக மாற்றும் முயற்சியில் தான் ஒருபோதும் ஓயப்போவதில்லை என்பதை புரட்சித்தாய் சின்னம்மா, செல்லும் இடமெல்லாம் அழுத்தம் திருத்தமாக பிரகடனப்படுத்தி வருகிறார்.
கழகத்தை கட்டுக்கோப்புடன் வழிநடத்திச் செல்ல உறுதிபூண்டுள்ள புரட்சித்தாய் சின்னம்மா, "நூற்றாண்டுகள் கடந்தாலும், அஇஅதிமுக தமிழக மக்களுக்காக தொடர்ந்து இயங்கும்" என்ற புரட்சித்தலைவி அம்மாவின் சூளுரைக்கு செயல்வடிவம் அளிப்பதே தனது நோக்கம் என்று உறுதிபடத் தெரிவிக்கிறார்.
அஇஅதிமுகவில் ஒற்றுமையை ஏற்படுத்தி, வலிமை மிகு இயக்கமாக மீண்டும் உருவாக்கி, 2026ம் ஆண்டு, தமிழக சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் - தமிழகத்தில் மாண்புமிகு அம்மாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் மலரச் செய்ய வேண்டும் என்ற புரட்சித்தாய் சின்னம்மாவின் மகத்தான லட்சியமும், நோக்கமும் உறுதியாக நிறைவேறும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.