கழக ஆண்டு விழாவை முன்னிட்டு சின்னம்மா சார்பில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக 53வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆணைக்கிணங்க, தென்காசி மாவட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தென்காசி மாவட்டம் நெல்கட்டும்செவல் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் வாரிசுதாரர்களாகிய 10 பெண்களுக்கு, புரட்சித்தாய் சின்னம்மா சார்பில் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. தென்காசி மாவட்டக் கழக நிர்வாகிகள் பூசைத்துரை, உதயா, பொன்னுத்தாய் ஆகியோர் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், ஒண்டிவீரன் ஆறுமுகம், நாட்டாமை சிவஞானம், ஜெகன், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மதன், தையல் ஆசிரியை கீதாராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தையல் இயந்திரங்களை பெற்றுக் கொண்ட பெண்கள், புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

நெல்கட்டும் செவல் பச்சேரி வெண்ணி காலாடி வாரிசுதாரர்களாகிய 15 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. தென்காசி மாவட்டக் கழக நிர்வாகிகள் பூசைத்துரை, உதயா, பொன்னுத்தாய் ஆகியோர் வழங்கினார்கள். தையல் இயந்திரங்களை பெற்றுக் கொண்ட பெண்கள், புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். 

சுந்தரபாண்டியபுரம் திருமலை குமாருக்கு சென்ட்ரிங் எந்திரம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன், ஜெகன், காளிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அஇஅதிமுக 53 வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, சங்கரன்கோவிலில் சுயஉதவிக் குழு பெண்களுக்கு விவசாய இயந்திரங்கள் வழங்கப்பட்டன. அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, அம்மாவின் வழியில் மக்கள் பயணம் மேற்கொண்டபோது களப்பாக்குளம் பகுதியைச் சேர்ந்த சின்னம்மா சுய உதவிக் குழு பெண்கள், விவசாயம் மேற்கொள்வதற்காக விவசாய இயந்திரங்கள் வழங்குமாறு கேட்டுக் கொண்டனர். அதன்படி, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆணைக்கிணங்க கதிர் அறுப்பு இயந்திரம், உழவு இயந்திரம், பூச்சி மருந்து அடிக்கும் இயந்திரம், விதை அறுக்கும் இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்கள் வழங்கப்பட்டன. தென்காசி மாவட்டக் கழக நிர்வாகிகள் பூசத்துரை, உதயா, பொன்னுத்தாய் ஆகியோர் அவற்றை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



Night
Day