கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் புரட்சித்தாய் சின்னம்மா கழகத்தை தலைமையேற்று வழிநடத்திட அழைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் புரட்சித்தாய் சின்னம்மா அஇஅதிமுகவை தலைமையேற்று வழிநடத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கழகத்தை தலைமையேற்று வழிநடத்திட வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் அழைப்புவிடுத்து வருகின்றனர். இந்நிலையில், மார்த்தாண்டத்தில் கழக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் வழக்கறிஞர் மில்லர் தலைமையில் நடைபெற்றது. இதில் புரட்சித்தாய் சின்னம்மா கழகத்தை தலைமை ஏற்று வழிநடத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து புரட்சித்தாய் சின்னம்மா சார்பில் 100 ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. 

Night
Day