எழுத்தின் அளவு: அ+ அ- அ
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்த, கழக மாவட்ட மகளிரணிச் செயலாளரின் கணவர் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்த, கழக மாவட்ட மகளிரணிச் செயலாளர் திருமதி சண்முகப்ரியாவின் கணவர் G.ராஜேஷ் கண்ணா திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.
தனது கணவரை இழந்து வாடும் அன்பு சகோதரி திருமதி சண்முகப்ரியாவுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.