எழுத்தின் அளவு: அ+ அ- அ
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பாப்பாஞ்சாவடியை சேர்ந்த கழக மகளிர் அணி கிளை செயலாளர் மல்லிகா அவர்கள் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பாப்பாஞ்சாவடியை சேர்ந்த கழக மகளிர் அணி கிளை செயலாளர் மல்லிகா அவர்கள் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.
அன்பு சகோதரி மல்லிகா அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.