கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக, ஏற்கெனவே 4 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்ட நிலையில், மேலும் ஒரு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த 11ம் தேதி இரவு பொன்னேரி அருகே கவரைப்பேட்டையில் சரக்கு ரயில் மீது, பாக்மதி விரைவு ரயில் மோதிய விபத்தில் 19 பேர் காயமடைந்தனர். விபத்து தொடர்பாக, விரைவு ரயிலின் லோகோ பைலட், துணை பைலட், ரயில் நிலைய அதிகாரிகள், விபத்து நடந்த பகுதியின் சிக்னல் பொறுப்பாளர் உள்பட 13  பிரிவுகளைச் சேர்ந்த 40 பேரிடம் தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி தலைமையில் கடந்த புதன்கிழமை விசாரணை நடத்தப்பட்டது. இந்த விபத்துக்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமில்லை, நட்டு, போல்ட் கழற்றப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் முன்னதாக வழக்குப் பதியப்பட்டு இருந்த நிலையில், ரயிலை சேதப்படுத்துதல் அல்லது தகர்க்க முயலுதல் என்ற பிரிவின் கீழ் மேலும் ஒரு வழக்கு சேர்க்கப்பட்டுள்ளது. 

Night
Day