கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில் என்.ஐ.ஏ. மீண்டும் ஆய்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் விபத்துக்கு மனித சதிச் செயல் காரணமா? என்ற கோணத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு சென்றுக்கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில்,  பெரம்பூர் வழியாக ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தபோது, நேற்று இரவு எட்டு முப்பது மணியளவில், திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில், விரைவு ரயிலில் இருந்த 13 பெட்டிகள் தடம்புரண்ட நிலையில், 2 குளிர்சாதன வசதிக்கொண்ட பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. தகலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் மற்றும் மீட்பு படையினர் காயமடைந்த பயணிகளை மீட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். 

ரயில்வே போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சிக்னல் கோளாறு காரணமாக ரயில் விபத்து நேர்ந்தது தெரியவந்துள்ளது. விபத்தை தொடர்ந்து இரு மார்க்கத்திலும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே கவரப்பேட்டை ரயில் நிலைய மேலாளர் அளித்த புகாரின் பேரில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day