எழுத்தின் அளவு: அ+ அ- அ
விளம்பர திமுக அரசால் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலையில் கவர்ச்சிகரமான திட்டங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளதாகவும் உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் விமர்சித்துள்ளனர்.
2021 ஆம் சட்டப்பேரவைத் தேர்தலில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களை நிறைவேற்றாமல் ஏமாற்றிய விளம்பர திமுக அரசு 2026 ஆம் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக வெற்று அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் விலையை மட்டும் குறைத்த திமுக அரசு தற்போது வரை டீசல் விலையைக் குறைக்கவில்லை என்றும் அதற்கான அறிவிப்பு இன்றைய பட்ஜெட்டில் இடம் பெறவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.
விளம்பர திமுக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்த மாதம்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும், நியாய விலைக் கடைகளில் 1 கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் குறித்து பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. கல்விக் கடன் ரத்து, நூறு நாள் வேலைக்கு ஊதியம் உயர்வு ஆகியவை தொடர்பாகவும் எந்த அறிவிப்பும் இல்லை நிதி நிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.
நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவதற்கும் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்குவது தொடர்பாகவும் எந்த உறுதியும் தெரிவிக்கப்படவில்லை. தமிழ் மொழியை கட்டாயப் பாடமாகவும் கட்டாயப் பயிற்றுமொழியாகவும் செயல்படுத்தும் திட்டம் குறித்தும் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. விளம்பர திமுக அரசில் நான்கு ஆண்டுகளில் ஒரே ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட திறக்காத நிலையில் புதிய மருத்துவக் கல்லூரி திறப்பு குறித்தும் அறிவிப்பு இல்லை.
மொத்தத்தில் கல்வி, மருத்துவம், வேளாண்மை போன்ற முதன்மைத் துறைகளுக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யாமல் வளர்ச்சியைப் பற்றி சிந்திக்காமல் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்குகளைப் பெற கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.