காஞ்சிபுரம்: வார சந்தையில் வசூலிக்கப்படும் பணத்தை கையாடல் செய்த ஊராட்சி செயலர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வார சந்தையில் வசூலிக்கப்படும் பணத்தை ஊராட்சி செயலர் கையாடல் செய்ததாக புகார் எழுந்துள்ளது. மாத்தூர் ஊராட்சியில் திங்கட்கிழமையன்று நடைபெறும் வார சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு தலா 50 முதல் 100 ரூபாய் வரை ஊராட்சிக்கு வருமானம் கிடைத்து வந்தது. இந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவரின் அதிகாரம் பறிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து பணிகளையும் ஊராட்சி செயலர் சுந்தரம் பார்த்து வந்துள்ளார். இதனிடையே வார சந்தையில் வசூலிக்கப்படும் பணத்திற்கு உரிய ரசீது வழங்காமல் ஊராட்சி செயலர் கையாடல் செய்ததாக வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர்.

Night
Day