காஞ்சி வரதராஜ பெருமாள் பார்வேட்டை உற்சவத்தின்போது மோதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் கிராமத்தில் காஞ்சி வரதராஜ பெருமாள் பார்வேட்டை உற்சவத்தின்போது வடகலை தென்கலை பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்திற்கு எழுந்தருளி பார்வேட்டை உற்சவம் கண்டருளுவது வழக்கம். அதன்படி பழையசீவரம் கிராமத்தில் நேற்று பார்வேட்டை உற்சவம் நடைபெற்றது. அப்போது பிரபஞ்சம் பாடுவதில் வடகலை தென்கலை பிரிவினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவருக்கொருவர் தாக்‍கிக்‍ கொண்டனர். அப்போது பெருமாளை வழிபட வந்த பக்‍தர்கள் இதனைக் கண்டு முகம் சுளித்தனர். பார்வேட்டை உற்சவத்தில் வடகலை ,தென்கலை பிரிவினர் இடையே சண்டையிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெகுவாக பரவியது.

Night
Day