காடுகளில் ஊடுருவும் தீவிரவாதிகள், நக்‍சல்களை கண்காணிப்பது எப்படி ..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை, பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் 300 பேர் அடர்ந்த காடுகளில் 7 நாட்கள் தங்கி காடுகள் பற்றிய பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். டெல்லியில் இருந்து கோவை வந்துள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 45 நாட்கள் ராக்கிப்பாளையம் பகுதியில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளி வளாகத்தில் பல்வேறு பயிற்சிகளை பெற்றனர். இவர்கள் 300 பேரும் சுமார் 15 குழுக்களாக பிரிந்து பாலமலை அடர் வனப்பகுதியில் டென்ட் அமைத்து தங்கி உள்ளனர். காடுகளுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகள், நக்சலைட்களை கண்காணிப்பது எவ்வாறு காடுகளில் எவ்வாறு உயிர் பிழைப்பது, மனிதர்கள் மற்றும் விலங்குகள் நடமாட்டம் பற்றி அறிவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.

varient
Night
Day