காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி.. கரை ஏறியதா...

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருவதோடு, ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காட்டு யானை வெள்ளத்திலிருந்து தப்பித்த பதைபதைக்கும் காட்சி வெளியாகியுள்ளது. கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இரண்டு நாட்களாக கன மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில், ஓவேலி தர்மகிரி பகுதியில் ஆற்றைக் கடக்க 3 யானைகள் தண்ணீரில் இறங்கியபோது, ஒரு யானை நீரில் அடித்து செல்லப்பட்டது. பாறைகளுக்கு மத்தியில் அடித்துச் செல்லப்பட்ட காட்டு யானை, தண்ணீரில் நீந்தி பாதுகாப்பாக கரை ஏறியது.

Night
Day