காணும் பொங்கல் - சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் முழுவதும் இன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. காணும் பொங்கலையொட்டி சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தைப்பொங்கல், மாட்டு பொங்கலை தொடர்ந்து 3வது நாளாக இன்று தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே, காணும் பொங்கலையொட்டி சென்னையின் முக்கிய பகுதிகளில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கலங்கரை விளக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் இடதுபுறமாக திரும்பி வாலாஜா சாலைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை, பெல்ஸ் சாலை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதற்கு மாறாக பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என்றும் கண்ணகி சாலையில் இருந்து பாரதி சாலை நோக்கி ஒருவழிப் பாதையில் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரை, பூங்காக்கள், திரையரங்குகளுக்கு செல்ல ஏதுவாக, சென்னையில் இன்று கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Night
Day