காதலியுடன் அநாகரிக ரீல்ஸ் - கண்டித்த மெட்ரோ ஊழியர் மீது தாக்குதல் - 3 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மெட்ரோ ரயில் நிலையத்தில் காதலியுடன் அநாகரிகமான முறையில் ரீல்ஸ் செய்ததை கண்டித்த மெட்ரோ ஊழியர் மீது தாக்குதல் நடத்திய மூன்று கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

கீழ்ப்பாக்கம் நேரு பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று மாலை கல்லூரி மாணவர் ஒருவர் தனது காதலியுடன்  அநாகரிகமான முறையில் ரீல்ஸ் எடுத்ததாக தெரிகிறது. அப்போது அங்கு இன்சார்ஜாக பணியாற்றி வந்த ஆகாஷ் என்பவர் அவர்களிடம் இங்கு வீடியோ எடுக்கக்கூடாது என கூறியுள்ளார். இதனால் ஊழியருக்கும், கல்லூரி மாணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தனது 2 நண்பர்களை அழைத்து வந்த அந்த மாணவர், ஆகாஷை சரமாரியாக தாக்கி உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை கொண்டு, ஊழியரை தாக்கிய கல்லூரி மாணவர் சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த அபுபக்கர் சித்திக் மற்றும் அவரது நண்பர்களான சூளையை சேர்ந்த விஜி, ஆண்டன் டேவிஸ் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். 

Night
Day