காரைக்கால் - கோவை வழித்தடத்தில் அதி நவீன பேருந்துகள் இயக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காரைக்கால் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அதிநவீன பேருந்து காரைக்கால் - கோவை வழித்தடத்தில் இயக்கப்பட்டது. காரைக்காலில் இருந்து கோயம்புத்தூர் வரை இயக்கப்பட்டு வந்த பேருந்து கடந்த 6 மாத காலமாக செயல்பாட்டில் இல்லாததால் பல்வேறு தரப்பினரும் மீண்டும் பேருந்தை இயக்க கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை அடுத்து புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகம் சார்பில், காரைக்கால், நாகப்பட்டினம், திருச்சி வழியாக கோயமுத்தூர் செல்லும் பேருந்தை அதே வழிதடத்தில் மீண்டும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், காரைக்காலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் அதிநவீன பேருந்து சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. 

varient
Night
Day