எழுத்தின் அளவு: அ+ அ- அ
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை, விருது வழங்கும் நிகழ்ச்சிக்காக விஜய் ரசிகர்கள் அழைத்து சென்ற போது, அவர்கள் அட்ராசிட்டியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறிதது விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு, விருது வழங்கும் விழா, நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தலைமையில் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் உள்ள விஜய் ரசிகர்கள் மாணவ, மாணவிகளை பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு காரில் சென்ற விஜய் ரசிகர்கள் மதுரை பைபாஸ் சாலையில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
விருது வழங்கும் விழாவுக்காக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மாணவ, மாணவிகளை பேருந்தில் அழைத்து சென்ற போது, பேருந்துக்கு முன்பாக காரில் சென்ற விஜய் ரசிகர்கள் காரின் இரு புறங்களிலும் தொங்கியவாறு பயணித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது...
விருது வழங்கு விழாவுக்காக இது போன்று மாணவ, மாணவிகளை அழைத்து செல்லும்போது பாதுகாப்பற்ற முறையிலும், கவனமின்மையுடனும் அழைத்து செல்வதா என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் கள்ளக்குறிச்சியில் சிறுவன் மீது விஜய் ரசிகர்கள் வைத்த பேனர் விழுந்த சம்பவம் அடங்குவதற்குள் தற்போது விஜய் ரசிகர்கள் அட்ராசிட்டியில் ஈடுபட்டுள்ளது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.