காவலர்கள் 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் : மாவட்ட எஸ்.பி. உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கனிமவள லாரியை நிறுத்தி லஞ்சம் பெற்ற காவலர்கள் 3 பேரை ஆயுதப்படைக்கு மாற்றி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுவதாக எழுந்த புகாரில், ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், செங்கோட்டை வனத்துறை சோதனை சாவடி அருகே கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை நிறுத்தி காவலர் ஒருவர் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரலானது. இதையடுத்து, அப்போது பணியில் இருந்த காவலர்கள் அன்பரசு, சுப்பிரமணியன், ஜெயராஜ் ஆகிய 3 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார். 

Night
Day