கிருஷ்ணகிரி: ஏரியில் தாகத்தை தணித்து வரும் காட்டு யானைகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வெயிலின் தாக்கத்தால் ஏரியில் காட்டுயானைகள் தாகத்தை தணித்து வருகின்றன. தமிழகம் முழுவதும் கடும் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் மட்டுமின்றி, வன விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் நீரின்று தவித்து வருகின்றன. இதற்காக, வனத்துறையினர் ஆங்காங்கே தொட்டிகள் வைத்து தண்ணீர் நிரப்பி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே, ஓசூர் அடுத்த அய்யூர் அருகே சாமி ஏரியில் காட்டு யானை கூட்டம் தாகத்தை தணிக்க நீர் அருந்தியும், ஆனந்த குளியலிட்டும் செல்கின்றன. தற்போது, அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Night
Day