கிருஷ்ணகிரி: நீர்நிலைகளுக்கு வந்து சென்ற 200க்‍கும் மேற்பட்ட பறவை இனங்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வனக்கோட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் 200க்‍கும் மேற்பட்ட பறவை இனங்கள் வந்து சென்றதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கே.ஆர்.பி. அணை, இராமநாயக்கன் ஏரி உள்ளிட்ட 25 நீர்நிலைகள் மற்றும் ஈரநிலங்களில் கடந்த இரு நாட்களுக்‍கு முன்பு வனத்துறையினர் பறவைகள் கணக்‍கெடுப்பு பணியை நடத்தினர். பாம்புண்ணி கழுகு, சிறிய கரும் பருந்து, செந்நாரை உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். டிசம்பர் மாதத்தில் வலசை வரும் இப்பறவை இனங்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்‍க ஏற்ற காலநிலை இருப்பதால், 20 ஆண்டுகளாக இப்பறவை இனங்கள் வந்து செல்வது கணக்கெடுப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Night
Day