எழுத்தின் அளவு: அ+ அ- அ
காக்கும் கடவுளாம் கண்ணபிரான் அவதரித்த திருநாளை உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் அனைவருக்கும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இதயம் கனிந்த ஸ்ரீ கிருஷ்ணஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஸ்ரீகிருஷ்ணரின் திருவருளால் தீயவை அகன்று, நன்மை செழித்து அனைவரும் ஒற்றுமையோடும், மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் என ஸ்ரீகிருஷ்ண பகவானை மனதார வேண்டுவதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், காக்கும் கடவுளாம் கண்ணபிரான் அவதரித்த திருநாளை 'ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி' என்றும் 'கோகுலாஷ்டமி' என்றும் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் அனைவருக்கும், தனது இதயம் கனிந்த "ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி" நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
“அறம் பிறழ்கின்ற போது நான் இவ்வுலகில் அவதரிப்பேன்” என்றுரைத்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளில், குழந்தைகளைக் கிருஷ்ணனைப் போல் அலங்கரித்து, வீட்டின் தலைவாசலில் இருந்து பூஜை மண்டபம் வரை ஸ்ரீபாதம் எனப்படும் குழந்தையின் பிஞ்சு பாதங்களை மாவில் நனைத்து பதிய வைத்து, கிருஷ்ணருக்கு விருப்பமான பால், தயிர், வெண்ணெய், அவல், பழங்கள், சீடை, முறுக்கு போன்ற பலகாரங்களைப் படைத்து, இறைவனை பக்தியுடன் வணங்கி, ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
மனிதகுலம் முறையாக வாழ்வதற்கு உரிய நெறிமுறைகளை, எந்த காலத்திற்கும் பொருந்தும் வகையிலான கருத்துகளுடன், ஞானரசமாம் பகவத் கீதையை இந்த உலகத்திற்கு உபதேசித்த பரமாத்மா ஸ்ரீகிருஷ்ணரின் திருவருளால் தீயவை அகன்று, நன்மை செழித்து அனைவரும் ஒற்றுமையோடும், மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் என ஸ்ரீகிருஷ்ண பகவானை மனதார வேண்டுகிறேன் என்றும், ஸ்ரீகிருஷ்ண பகவான் அவதரித்த இத்திருநாளில் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்றும் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.