எழுத்தின் அளவு: அ+ அ- அ
கருணையே வடிவான இயேசு பிரான் அவதரித்த திருநாள், நாளை மறுதினம் வருவதையொட்டி சென்னை கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் சாலையில் உள்ள நேர்ச்சை திருத்தல மாதா ஆலயத்திற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சென்று வழிபட்டார். பின்னர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கருணை இல்லத்தில் ஆதரவற்ற முதியவர்களோடு இணைந்து கேக் வெட்டியும், முதியோர்களுக்கு உணவு, நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கிறிஸ்துமஸ் பெருவிழாவினை கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கொண்டாடினார்.
புரட்சித்தலைவி அம்மா, ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துவப் பெருமக்களோடும், கழகத் தொண்டர்களோடும் கிறிஸ்துமஸ் விழாவினை சிறப்புடன் கொண்டாடினார். அதேபோன்று கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கிறிஸ்துமஸ் பெருவிழாவை, ஆதரவற்ற முதியோர்களோடு இணைந்து கேக் வெட்டியும், முதியோர்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாடினார். கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி சென்னை கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் சாலையில் உள்ள நேர்ச்சை திருத்தல மாதா ஆலயத்திற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வருகை தந்தபோது, தேவாலயத்தின் பேராயர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, நேர்ச்சை திருத்தல மாதா ஆலயத்தில் புரட்சித்தாய் சின்னம்மா வழிபட்டார்.
இதனைத் தொடர்ந்து, ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கருணை இல்லத்தில் ஆதரவற்ற முதியவர்களோடு, புரட்சித்தாய் சின்னம்மா இணைந்து கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.
இதனை அடுத்து பேராயர் சிறப்பு பிரார்த்தனை நடத்தி கிறிஸ்துமஸ் உரை நிகழ்த்தினார்.
பின்னர் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை புரட்சித்தாய் சின்னம்மா வழங்கினார்.
தொடர்ந்து, ஆதரவற்ற ஏழை எளியோருக்கு உணவு வழங்கி கிறிஸ்துமஸ் பெருவிழாவினை கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கொண்டாடினார்.
இந்நிகழ்ச்சியில் கிறிஸ்தவ பேராயர்கள், ஆயர்கள், போதகர்கள், கிறிஸ்தவ பெருமக்கள், ஆதரவற்ற முதியவர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.