கீழடியில் நடைபெற்று வரும் 10ம் கட்ட அகழாய்வு பணிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 10ம் கட்ட அகழாய்வு பணிகளை தமிழக தொல்லியல் துறை ஆணையர் நேரில் ஆய்வு செய்தார். கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஒன்றரை ஏக்கர் நிலத்தில், 2 குழிகள் தோண்டப்பட்டு நடந்த பணிகளில் பாசிகள், கண்ணாடி மணிகள், மீன் உருவம் பொறித்த பானை ஓடுகள், வட்டச்சில்லுகள் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்கள் கிடைத்தன. இந்நிலையில், தமிழக தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் அகழாய்வு பணிகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். இந்தாண்டு குறைவான காலங்களில் அகழாய்வு நடப்பதால் காலக்கெடுவை நீட்டிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். 

Night
Day