எழுத்தின் அளவு: அ+ அ- அ
கீழநத்தம் பகுதிக்கு வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, ஏராளமான பெண்களும், கழகத் தொண்டர்களும் கழகக் கொடி மற்றும் இரட்டை இலை சின்னத்தை ஏந்தியபடி, வாழ்த்து முழக்கங்களுடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
கீழநத்தம் பகுதியில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழகத் தொண்டர்கள் வேல் கொடுத்தும், மரக்கன்றுகள் கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கீழநத்தம் பகுதியில் பெருமளவில் திரண்டிருந்த கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே உரையாற்றிய புரட்சித்தாய் சின்னம்மா, திமுக அரசு, மக்களிடம் வரி என்ற பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபட்டு பணத்தை பறித்து வருவதாகவும் மின் கட்டண உயர்வு என்ற பெயரில் ஏழை, எளிய மக்களை பெரும் இன்னலுக்கு ஆளாக்கி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புரட்சித்தாய் சின்னம்மா, திமுக ஆட்சி சரி இல்லை என்று, செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் குற்றம் சாட்டுவதாக தெரிவித்தார். "அம்மா வழியில் மக்கள் பயணத்திற்கு" சிறப்பான வரவேற்பு கிடைப்பதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார்.
கீழநத்தம் கிராமத்திற்கு "அம்மா வழியில் மக்கள் பயணமாக" வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு பொதுமக்களும் கழகத் தொண்டர்களும் நன்றி தெரிவித்தனர். தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், புரட்சித்தாய் சின்னம்மா தொட்டுக் கொடுத்த மரக்கன்றினை அப்பகுதியில் நட்டு வைத்தனர்.