குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல்

எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் அருகே கிராமத்திற்கு முறையாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மோகனூர் ஒன்றியம் கங்கநாயக்கன்பட்டியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு ஆழ்துளை கிணறு மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த சில மாதமாக சரியாக குடிநீர் வராததால் தோப்பூர் பகுதியில் கங்கநாயக்கன்பட்டி ஊர்பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த மோகனூர் தாசில்தார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் சாலை மறியல் கைவிடப்பட்டது.

Night
Day