எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஈரோடு அருகே குடும்பத் தகராறில், 4 வயது மகன் மீது தந்தை பெட்ரோலை தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த திருமலைசெல்வன் என்பவருக்கும், ஈரோட்டை சேர்ந்த சுகன்யா என்ற பெண்ணிற்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், திருமலைசெல்வன் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறு செய்ததால், சுகன்யா தனது குழந்தைகளுடன் மாணிக்கம்பாளையத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் மனைவி, குழந்தைகளை பார்க்க சென்ற திருமலைசெல்வன் மீண்டும் சுகன்யாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மனைவி மற்றும் குழந்தைகள் மீது ஊற்றி தீ வைத்ததில் 4 வயது சிறுவன் நிகில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து 70 சதவீதம் தீக்காயமடைந்த சிறுவனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து தாய் சுகன்யா அளித்த புகாரின் அடிப்படையில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த திருமலைச் செல்வனை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.