குட்டையில் மூழ்கி மாணவன், தலைமை ஆசிரியர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே விவசாய நீர் சேமிப்பு தொட்டியில் தவறி விழுந்த 3-ம் வகுப்பு மாணவரை காப்பற்ற சென்ற தலைமை ஆசிரியரும் நீரில் முழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எழுவப்பள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு படித்து வந்த 3-ம் வகுப்பு மாணவர் மதிய உணவு இடைவேளையின் போது பள்ளியின் பின்புறம் விவசாய பாசனத்திற்காக தொட்டி அமைக்கப்பட்டு நீர் சேகரிக்கப்பட்டு வருகிறது. அந்த தொட்டியில் தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்த பள்ளி தலைமை ஆசிரியர் கவுரி சங்கர் ராஜா சிறுவனை மீட்க இறங்கியுள்ளார். ஆனால் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபாமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துமவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவரின் சடலத்தை பார்த்து பெற்றோர் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. 

Night
Day