குமரி அனந்தன் மறைவு - தலைவர்கள் அஞ்சலி

எழுத்தின் அளவு: அ+ அ-

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் குமரி அனந்தன் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 93. வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்சனை காரணமாக வானகரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 4-ம் தேதி விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நள்ளிரவு உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது மகளும், பாஜக மூத்த தலைவருமான டாக்டர்.தமிழிசை செளந்தரராஜனின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்கு விருகம்பாக்கத்தில் உள்ள இடுகாட்டில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day