குமரி கடற்கரையில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரியில் வார விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் காலை முதலே கடற்கரையில் குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர். ஆந்திரா, கர்நாடகா, தெலங்கான உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்கள் முக்கடல் சங்கமத்தில் குளித்துவிட்டு சபரிமலை புறப்பட்டு சென்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் சூரிய உதயத்தை கண்டு ரசித்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பகதர்கள் வருகையால் கன்னியாகுமரி பகுதியே களைகட்டி உள்ளது.

Night
Day