குமரி: சிறப்பு ரயில்கள் மீண்டும் பயணிகள் ரயிலாக மாற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கொரோனா காலத்தில் பயணிகள் ரயிலை, சிறப்பு ரயில்கள் என மாற்றம் செய்து கட்டணம் வசூலித்த நிலையில் அவற்றை மீண்டும் பயணிகள் ரயிலாக மாற்றியுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  குமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம், நெல்லை, மதுரை மற்றும் கோவைக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களை பயணிகள் ரயிலாக மாற்றம் செய்து, கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு 40 ரூபாய் கட்டணம் வசூலித்த நிலையில் இன்று முதல் 20 ரூபாய் வசூல் செய்யப்படும் என்றும், நெல்லைக்கு 20 ரூபாய், கோவைக்கு 100 ரூபாய் மற்றும் மதுரைக்கு 50 ரூபாய் என கட்டணங்கள் பாதிக்கு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Night
Day