கும்பக்கரை அருவியில் 3 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதால் 3 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. 

பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க 3 நாட்கள் தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது மழை குறைந்து நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். 

varient
Night
Day