குரல் எழுப்பிய சின்னம்மா... திறக்கப்பட்ட எஸ்.பி. அலுவலகம்...

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, அண்மையில், தென்காசி மாவட்டத்தில், "அம்மாவின் வழியில் மக்கள் பயணம்" மேற்கொண்டபோது, பல இடங்களில் பொதுமக்கள் அவரிடம், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியன புதிதாக கட்டப்பட்டும், நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருப்பதாக தெரிவித்ததையடுத்து, அந்த அலுவலகங்களை உடனடியாக திறந்து மக்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தினார். இந்நிலையில், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதற்காக புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு தென்காசி மாவட்ட மக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றிடவும், திமுக தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டிடவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை பேணிக் காத்திடவும், அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, அம்மாவின் வழியில் மக்‍கள் பயணத்தை, தென்காசி மாவட்டத்தில்  அண்மையில் மேற்கொண்டார். சின்னம்மா சென்ற இடமெல்லாம் சாலையின் இருமருங்கிலும் பொதுமக்‍கள் மற்றும் கழகத் தொண்டர்கள் பெருமளவில் திரண்டு நின்று எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். 

குடிநீர், மருத்துவ வசதி, போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்களின் தேவைகள் குறித்து பல இடங்களில் பொதுமக்கள், புரட்சித்தாய் சின்னம்மாவிடம்  எடுத்து கூறினார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து, தென்காசி மாவட்டம் தனியே உருவாக்கப்பட்டு, 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தென்காசி மாவட்டத்தில் பல அடிப்படை தேவைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். குறிப்பாக, தென்காசி மாவட்டத்திற்கான மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியன புதிதாக கட்டப்பட்டும் இன்னும் திறக்கப்படாமல் இருப்பது பற்றி பொதுமக்கள், புரட்சித்தாய் சின்னம்மாவிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தில் பல இடங்களில்  உரையாற்றிய புரட்சித்தாய் சின்னம்மா,  இந்த அலுவலகங்களை உடனடியாக திறந்து பொதுமக்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என திமுக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். 

புரட்சித்தாய் சின்னம்மா தொடர்ந்து வலியுறுத்தியதை அடுத்து, தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதற்காக தென்காசி மாவட்ட மக்கள், புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு நெஞ்சார்ந்த நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, புரட்சித்தாய் சின்னம்மா முன்வைத்துள்ள மற்ற கோரிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

varient
Night
Day