குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை நிர்வாகி, வனக் காவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு குரூப்-4 தேர்வை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜனவரி 30-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு கடந்த ஜுன்-9 ம் தேதி நடைபெற்றது.

சுமார் 20 லட்சம் பேர் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 7 ஆயிரத்து 247 மையங்களில் 15 லட்சத்து 80 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். அதன் பின்னர் குரூப்-4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. பின் இரண்டாவது கட்டமாக 2 ஆயிரத்து 208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு, 8 ஆயிரத்து 932 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை tnpscresults.tn.gov.in, tnpscexams.in ஆகிய இணையதளங்களில் தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 559 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 491 ஆக உயர்ந்துள்ளது.

Night
Day