குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்னும் 2 நாட்களில் வெளியாகும் என தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்னும் 2 நாட்களில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. 6 ஆயிரத்து 244 பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வு கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 15 லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுதியிருந்த நிலையில், தற்போது பணியிடங்கள் 8 ஆயிரத்து 932ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தேர்வு முடிவுகள் இன்னும் 2 நாட்களில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. 

varient
Night
Day