குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தண்ணீர் வரத்து தற்போது சீரான நிலையில் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி  அளிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்கின்றனர். 

varient
Night
Day