குற்றால அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடந்த ஒரு வாரமாக தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்ததால், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது நீர்வரத்து சீரானதை அடுத்து சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய உள்ளிட்ட அருவிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் ஆனந்த குளியலிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

Night
Day