குற்றால அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலத்தில் குளிக்க 7வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அருவிகளில் கடும் சேதம் ஏற்பட்ட நிலையில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின் ஐந்தருவி மற்றும் புலியருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனிடையே, சீரமைப்பு பணிகள் நடைபெறாததால் மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலத்தில் குளிக்க 7வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Night
Day