குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. 

தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபாய வளைவை தாண்டி தண்ணீர் கொட்டி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அருவிகளில் வெள்ள நீர் சீரானவுடன் வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day