குலதெய்வ கோவிலில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வழிபாடு

எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை அருகே விளார் கிராமத்தில் உள்ள குலதெய்வம் வீரனார் கோவிலில் வழிபாடு செய்த அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் யாகசாலை பூஜையிலும் பங்கேற்று பிரார்த்தனை மேற்கொண்டார்.

தஞ்சை அருகே உள்ள விளார் கிராமத்திற்கு வருகை தந்த அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, அங்குள்ள குலதெய்வம் வீரனார் கோவிலுக்கு சென்று பூஜைகள் செய்தார். அங்கிருந்த வனதுர்க்கையம்மனுக்கு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டது. முன்னதாக யாக பூஜையும் நடைபெற்றது. இதில் புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்று மனமுருக வழிபட்டார்.

பின்னர் புரட்சித்தாய் சின்னம்மாவை, விளார் கிராம மக்கள் சந்தித்து அருகே இருந்த பச்சையம்மன் கோவிலுக்கு அழைத்து சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர். அங்கிருந்த குழந்தைகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா இனிப்புகள் வழங்கினார்.

விளார் கிராமத்திலிருந்து புறப்பட்டு தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலை புரட்சித்தாய் சின்னம்மா வந்தடைந்தார். புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் யாகசாலைக்கு சென்ற புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் புரட்சித்தாய் சின்னம்மா யாகசாலை பூஜையில் கலந்து கொண்டார்.

தொடர்ந்து, கோவிலை விட்டு புரட்சித்தாய் சின்னம்மா வெளியே வரும் போது சென்னையைச் சேர்ந்த கழக தொண்டர் மெய்யப்பன்-குணசியா தம்பதியினர் தங்களது ஒரு மாத ஆண் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அகம் மகிழ்ந்த புரட்சித்தாய் சின்னம்மா, குழந்தைக்கு ஜெயகரன் எனப் பெயர் சூட்டி வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் வழங்கினார்.


Night
Day